மனதை மயக்கும் ஜீவானந்தன் ராமின் ‘தனியாய்’ பாடல்

635

இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம், இயக்குனர் மாதவன் மகேஸ்வரனின் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தில் இணைந்து கொண்டதன் மூலம் பலராலும் அறியப்பட்டவர். அது மட்டுமல்லாது ‘ரீ கடை பசங்க’ எனும் இசைக்குழுவிலும் இவர் அங்கம் வகிக்கின்றார்.

இலங்கையில் சமகாலத்தில் வினைத்திறனுடன், தொடர்ச்சியாக இயங்கி அட்டகாசமான பாடல்களை வெளியிட்டு வருகின்றார். இரண்டு வாரத்திற்கு முன்பு கூட இவரது ‘தூரம் போகாதே’ பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், தற்சமயம் ‘தனியாய்’ பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கான வரிகளை ராய் எஸ் சலோம் எழுதியுள்ளதுடன் இலங்கையின் முன்னணிப்பாடகர்களில் ஒருவரான சுதர்சன் ஆறுமுகம் மற்றும் அதிதி திவ்யா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இப்பாடலை மாதவன் மகேஸ்வரன் இயக்கியுள்ளதுடன், படத்தொகுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். ஒளிப்பதிவு சேனாதி சேனா. ஜோயல் மற்றும் கமலினி ஆகியோர் இப்பாடலில் நடித்துள்ளனர். காதல் பாடல் என்பதால், பார்ப்பதற்கு கேட்பதற்கும் இனிமையான ஒரு பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது.

Cast – Joel Chriz & Kamalini Jey
Music Composed – Jeevanandhan Ram
Vocals -Sudarshan Arumugam & Adithi Divya
Lyrics – Ray S. Shalome
Mixed & Mastered – Jeevanandhan Ram
Directed – Mathavan Maheswaran
Cinematography – Senathi Sena
Edit – Mathavan Maheswaran (Studio M3)
Audio Supervisor – Nicky.m