‘காதல் அந்தாதி – பகுதி 1’ விரைவில் வெளியீடு

312

இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்களின் ஒன்றிணைவில் “காதல் அந்தாதி – பகுதி 1” (இசை மீட்டும் உயிர் ராகம்) பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

இப்பாடலை சரிகம இசைக்குழுவின் நிர்வாக இயக்குனரும் இசையமைப்பாளருமான கருணா, ஸ்ரீவத்சலா, பிரசாந்தி மற்றும் பிரவீனா ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் இசையில் பங்கேற்றுள்ள அணி சேர் கலைஞர்களாக பியானோ மற்றும் இசைக்கலவை இசையமைப்பாளர் செந்தூரன், தபேலா மற்றும் வீணை முறையே இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்களான ரட்ணம் ரட்னதுரை மற்றும் என்.எஸ்.வாகீசன்.

வி.கே.ஸ்டார் குமணனின் படத்தொகுப்பு மற்றும் ஒழுங்கமைவில் இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.