கலைமாறன் இயக்கத்தில் “கிறுக்கல்” குறும்படம்

353

எம்.கே.கலைமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “கிறுக்கல்” குறும்படம் விரைவில் இணையத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

05 நிமிடங்களைக் கொண்டதாக அமைந்துள்ள இக்குறுப்படத்தில் வராகினி ஜெகதீஸ்வரன், நகுலேந்திரன் நிமல், ராசேந்திரம் சரண்யா, சிவகுமார் சமித்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு மூவேந்தன்.

இக்குறும்படம் தற்கால வாழ்வியல் மற்றும் யுத்தத்தின் பின்னரான சிறுவர்களின் வாழ்வு நிலை ஆகியவற்றை மையப்படுத்தியது என குறும்படத்தின் உதவி தே.பிரியன் தெரிவித்துள்ளார்.