பிறைநிலா இயக்கத்தில் “ஜெசி” குறும்படம் – சொல்லப்படாத கதையொன்றின் காதல்

380

“விண்ணைத்தாண்டி வருவாயா? – பார்ட் 2” எப்போது ஆரம்பிக்கப்படும் என கௌதம் மேனன் – சிம்பு ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த போது தான் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை கொரோனா முடக்க காலத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு.

குறும்படம், இருந்த பெயரைக் கெடுத்துக் கொண்டது என்ற விமர்சனம் ஒரு புறம். உண்மையைப் பேசியது என்ற விமர்சனம் மறுபுறம். எனவே, பாராட்டையும் கடும் விமர்சனங்களையும் கலவையாகப் பெற்றுக் கொண்டது படம்.

எது எப்படியோ, அந்தக் குறும்படத்தை இணைய வெளியில் புரட்டிப் போட்டு விட்டார்கள் சினிமா விரும்பிகள். அதை ஸ்பூபாக வைத்து விதம் விதமான குறும்படங்கள் யு-ரியூப்பை நிறைத்தன. இலங்கையில் இருந்து கூட பல குறும்படங்கள் வெளிவந்தன. அவற்றில் சிலவற்றை எங்கள் இணையத் தளத்திலேயே வெளியிட்டிருந்தோம்.

அந்த வகையில் புதிதாக பிறைநிலா கிருஷ்ணராஜாவின் இயக்கத்தில் தயாராகின்றது “ஜெசி”. எல்லோரும் கார்த்திக்கின் பால் உருகி நிற்க, ஜெசியின் பக்கம் நின்று பேசப்போகின்றது இக்குறும்படம். ”சிலவேளைகளில் மெல்லிசைபோல் எம்மை வருடிச் சென்ற காற்றுக்குத் தெரிவதில்லை அதன் மெல்லியல்பு” எனும் வரிகளுடன் குறித்த குறும்படத்திற்கான முதற்பார்வை வெளியிடப்பட்டிருக்கின்றது.

நிச்சயம் இப்படம், இதுவரை வெளிவந்த குறும்படங்களில் இருந்து ஒரு வித்தியாசமான பார்வையாக இருக்கும் என்பது முதற்பார்வையைப் பார்த்த உடனே புரிகின்றது. முழுப்படத்திற்கும் வெயிட்டிங்.