வெளியீட்டுக்குக் காத்திருக்கும் “ஒருவன்” திரைப்படம் பற்றி மனம் திறக்கும் நாயகன்

475

டி.என். தர்சன் இயக்கத்தில் அஜய், டெனிஷ்ராஜ், பிரணா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஒருவன்”. இதன் டீசர் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் பட வெளியீடு குறித்த திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், படம் குறித்த மேலதிக தகவல்களை நடிகர் அஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒருவன் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் படம் என்பதுடன், 02 மணித்தியாலங்கள் 16 நிமிடங்கள் கால அளவைக் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 6 நிமிடம் 32 செக்கன்களைக் கொண்ட மிக நீண்ட காட்சி ஒன்றும் 03 நிமிடங்களுக்கு மேற்பட்ட இரண்டு காட்சிகளும் படத்தில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பு நிர்வாகத்தின் சில எதிர்பாராத பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பரவலில் வீச்சுக் குறைந்த பிற்பாடு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் அஜய் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனராக விளங்கும் தர்சனின் “ஒருவன்” திரைப்படம் விரைவில் வெளியாகி வெற்றியடைய குவியத்தின் வாழ்த்துக்கள்.