தளபதியின் பிறந்த நாளுக்கு சுபாங்கனின் அர்ப்பணம்

1130

தளபதி விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நடித்த திரைப்படங்களில் இருந்து முத்தான சில மெலடி பாடல்களை எடுத்து அழகாக கோர்வையாக்கியிருக்கின்றார் பாடகர் சுபாங்கன்.

விஜய்யின் பிறந்த தினமாக கடந்த 22 ஆம் திகதி இப்பாடல் இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. குறிப்பாக சுபாங்கனின் மனதை வருடும் குரலுக்கு பலரும் அடிமையாகி, “நம்மூரில் இப்படி ஒரு பாடகனா?” என “அட!” போட வைக்கிறது.

இப்பாடலில் பின்னணி இசைக்கலைஞர்களாக ஷானு மற்றும் திசோன் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன், ஒலிக்கலவை பத்மயன் சிவா. காணொளி உருவாக்கத்தில் ஒளிப்பதிவு கமலதாசன், சாஜிசங்கர், சரத் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன், படத்தொகுப்பு சரத்.

Subangan ft Shanu & Thishon
Master & Mix – Pathmayan ( Ten Studios )
DOP – Kamalathasan l Sajisangar l Sarath
Editing – Sarath
Color Grading – Sajisangar
Recorded – Jeyanthan ( Ten Studios )
Art Department – Shanjeevan l Umesh
Production Team – Piranavaraj l Kesavan l Thilakshan l Micheal