நாளை வெளியாகிறது சபேசனின் “பூர்வீக நிலம்” குறும்படம்

930

கர்ணன் படைப்பகம் தயாரிப்பில் சண்முகநாதன் சபேசனின் இயக்கத்தில் உருவான “பூர்வீக நிலம்” குறும்படம் நாளை இணையத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இக்குறும்படத்தில் சபேசன், சதீசன், சுதர்சினி உள்ளிட்ட பலர் நடித்திருப்பதுடன், பல்வேறு தென்னிந்தியத் திரைப்படங்கள் பற்றும் ஈழத்திரைப்படங்களில் நடித்துள்ள ரமேஷ் வேதநாயகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்திருந்தாலும் தாயகத்தில் உள்ள தனது பூர்வீக நிலத்தின் மேல் பற்றுக்கொண்ட ஒருவனைப் பற்றிய கதையாக இக்குறும்படம் உருவாகியுள்ளதுடன், நோர்வே தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் இவ்வாண்டு சிறப்புத் திரையிடலுக்காகவும் இப்படம் தெரிவாகியுள்ளதுடன் மேலும் சில சர்வதேச விருதுகளையும் இக்குறும்படம் தட்டிக்கொண்டுள்ளது.

இக்குறும்படத்தின் இயக்குனர், மற்றும் நடிகரான சபேசன் சண்முகநாதனுக்கு கடந்த வருடம் நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் “தமிழ்ச்செல்வி” குறும்படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.