நிலானின் “கானிபாலிசம்” குறும்படம்

1176

ஈழத்தில் பல குறும்படங்களை இயக்கிய எஸ்.ஏ.நிலானின் புதிய குறும்படம் “கானிபாலிசம்”. இப்படத்தை நேற்று (08) யு-ரியூப்பில் வெளியிட்டுள்ளது படக்குழு.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தை கருவாகக் கொண்டு நிலான் எழுதி இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில் துஸிகரன், கிருத்திகன், பிரவீனா, ஸ்டாலின், கோகுல் ஆகியோர் நடித்திருப்பதுடன், தீபன் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கின்றார்.

துஸிகரனின் படத்தொகுப்பு மற்றும் பானுவின் நிறக்கலவையில் வெளிவந்திருக்கும் இப்படத்திற்கான இசை சி.சுதர்சன். தயாரிப்பு – ஏஆர்சி மொபைல் விஜி.

“கானிபாலிசம்” குறும்படம் குறித்து அதில் பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கும் துஸிகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நண்பா் நிலானின் எழுத்து இயக்கத்திலும் சக திரைத்துறை நண்பர்களின் பங்களிப்போடு உருவாகிய கானிபாலிசம் எனும் குறுந்திரைப்படத்தை பாா்வையிடமுடியும் என்ற தகவலை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

போரியல் வாழ்வின் பின்னரான காலப்பகுதிகள் எமக்கு எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது என்பதை இக்குறுந்திரைப் படத்தினூடாக நீங்கள் உணர முடியும். 2018ம் ஆண்டு youth star என்ற அமைப்பு நடாத்திய குறுந்திரைப்பட போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைக்கப்பெற்றது.

எமது இந்த குறுந்திரைப்படத்தில் பங்குகொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.நன்றி