சசிகரன் யோவின் “அத்தியாயம் 01” குறும்படத் தொடர்

681

இலங்கைத் தமிழ் சினிமாவில் முன்னணிப் படத்தொகுப்பாளராக திகழ்பவர் சசிகரன் யோ. இவர் இடையிடையே ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கக்கூடியவர். சமூகம் சார்ந்த பல குறும்படங்களை ஏலவே படைத்து தன்னை நிரூபித்தவர்.

சசிகரன் யோவின் புதிய பயணமாக இந்தக் குறும்படத்தொடர் அமைகின்றது. இதன் முதல் அத்தியாயம் அண்மையில் வெளியாகியுள்ளது. த்ரில்லரை மையப்படுத்தி இந்த அத்தியாயம் 01 இன் அடுத்த பகுதி எப்பொழுது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றார்.

சாத்வீகன், சாஜூ, ஜெனிஸ்ரன் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இந்தக் குறும்படத்தொடரை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியிருக்கிறார் சசிகரன் யோ.