“யாம் அஞ்சோம்” – அட்டகாசமான நம்மவர் பாடல்!

597

இலங்கைக் கலைஞர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பாடல்கள், குறும்படங்கள் என வெளிவந்து கொண்டிருந்தாலும், அதில் ஒரு சில படைப்புக்கள் மட்டுமே “அட” போட வைக்கின்றன. அப்படி “அட” போட வைத்த பாடல் என்றால் “யாம் அஞ்சோம்” ஐ குறிப்பிடலாம்.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்திருக்கும் “ரப்” இசைப்பாடலான இந்தப் பாடலில், ஒளிப்பதிவு – படத்தொகுப்பு – பாடல் வரிகள் – இசை என எல்லாமே அசத்தலாக அமைந்திருக்கின்றது.

கேகே-கோகிலராஜ் இசையில் கே.கஜிந்தனின் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை ரப் இசைக்கலைஞர்களான கே.கஜிந்தன், ஷகான் ஷா ஆகியோர் பாடியுள்ளனர். அவருடன் பெண் பாடகியாக கே.கோவிதாவும் இணைந்துள்ளார்.

பாடலில் கோவிதா, கஜிந்தன், ஷகான் ஷா, சிகே அனுஷாந், கிஷானிக்கா, லெனார்ட், தனுலக்ஷான் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர். பாடலின் தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பைப் புரிந்திருக்கின்றார்கள்.

அந்த வகையில், ஒளிப்பதிவு – க்ரிஷ் டிலான், படத்தொகுப்பு – எஸ்.என் விஷ்ணுஜன், ஜி.புஷ்பகாந்த், பாடலை இயக்கியுள்ளார் “வேட்டையன்” திரைப்பட இயக்குனரான எஸ்.என்.விஷ்ணுஜன்.

Labrat Production & Killers Production
Editing – S.N.Vishnujan & G. Puspakanth
Cinematography by Chris Dilan
VFX – Renujan
Publicity Design – Ajinthraprasath
Title Design – Seshananth
Grading & DI by A.Achchuthan
Assistant – Joel
Directed by S.N.Vishnujan