“சிந்தனை செய்” – விழிப்புணர்வுக் குறும்படம்

772

பல்வேறு ஜோனர்களில் எம்மவர்கள் குறும்படங்களை எடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விழிப்புணர்வுக் குறும்படமாக வவுனியாவில் இருந்து வெளிவந்திருக்கின்றது சஞ்ஜையின் “சிந்தனை செய்” குறும்படம்.

மனிதர்களால் வீணடிக்கப்படும் தண்ணீர் பற்றி குறிப்பிடும் இந்தப் படத்தில், மனிதனுக்குப் பயன்படாத நீர்; மரஞ்செடி, கொடிகளுக்காவது பயன்படட்டுமே! என்பதாக அமைகிறது.

படைப்பாளிகள் உலகம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 02 நிமிட விழிப்புணர்வுப் படமான இதில், மிதுனா, மதுசுயா, அஜந்தன், தயாளன், கிருஷாந்தன், கவிசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். உதவி இயக்கம் – கபில் ஷாம், இசை – விகே ஸ்டார் குமணன், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சஞ்ஜை.