நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய “பிரண்ட்ஷிப்” படக்குழு

290

இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், முதன் முறையாக சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படம் “பிரண்ட்ஷிப்”. இதில் அக்ஷன் கிங் அர்ஜூன், இலங்கையைச் சேர்ந்த “பிக் பொஸ்” புகழ் லொஸ்லியா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஹர்பஜன் சிங் நடிப்பதால் இப்படத்தை இந்திய அளவில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தங்களது விளம்பரப்படுத்தலுக்காக “சுப்பர் ஸ்டார் அந்தம்” எனும் பாடலையும் அண்மையில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அப்படத்தின் காட்சிகள் அடங்கிய முன்னோட்டம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, பிரபல்யமான ஹர்பஜன் மற்றும் லொஸ்லியா ஆகியோர் இப்படத்திலேயே அறிமுகமாவதால், இவர்களின் நடிப்பும் எப்படி இருக்கும் என பார்க்க பலர் ஆர்வமாக இருந்தார்கள். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவர்களின் நடிப்பு இருப்பதாக இப்போது சிலாகிக்கப்படுகிறது.