ஜெறாட் நோயலின் Munima Beat| මුනිමා Beat சிங்களப் பாடல்

335

நடிகர் ஜெறாட் நோயல் சகோதர மொழியில் ‘முனிமா Beat’ பாடல் மூலம் அறிமுகமாகின்றார் என்ற செய்தியை குவியம் வாசகர்களுக்காக அண்மையில் தந்திருந்தோம். அந்தப் பாடல் இன்று மாலை யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

2 வருடங்களுக்கு முதல் படப்பிடிப்பு செய்யப்பட்ட இந்தப் பாடல் தமிழ் – சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக படம்பிடிக்கப்பட்டது. தமிழில் ஆர்.ஜே.நெலுவும் சிங்களத்தில் ஜெறாட்டும் நடித்துள்ளனர். இதுவொரு நேர்த்தியான சிங்களப் பாடலாக வெளிவந்திருப்பதாக சிங்கள மொழியில் பரீட்சயமான பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈழ சினிமாவில் 10 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜெறாட்டுக்கு மிகச்சிறந்த அறிமுகத்தை சிங்கள சினிமா விரும்பிகள் மத்தியில் கொடுக்கும் இந்தப் பாடல் என எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு…

Director- Kanna Uthay
Director of Photography – Rishi Selvam
Music – Pathmayan Sivananthan
Lyrics – Kanna Uthay