அமேசன் ப்ரைமில் பிரேம் கதிரின் “சுழியம்”

582

இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத் திரைச் செயற்பாட்டாளர் பிரேம் கதிர். இவரது இயக்கத்தில் உருவான “சுழியம்” குறும்படத்தை Amazon Prime இல் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து வாழ் மக்கள் பார்க்க முடியும் என்ற அறிவிப்பை இயக்குனர் விடுத்துள்ளார்.

இக்குறும்படத்தில் அருண் பிரசாத், உபசனா, மாஸ்டர் சஞ்ஜித், அலிஷ் காருண்யா, மாஸ்டர் ஆதித்யா, ஸ்ரீநிசா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு வசந்தகுமார் வெங்கடாச்சலம், படத்தொகுப்பு வி.எஸ்.விஷால், இசை அர்ரோல் கொரெல்லி. எழுதி இயக்கியிருப்பவர் பிரேம் கதிர்.

இப்படத்தின் ட்ரையிலர் ஒன்றை படக்குழு அண்மையில் வெளியிட்டுள்ளது.