ஷமீல் – மிதுனா மீண்டும் இணையும் “கனவே நீ” பாடல்

342

SS Jaffna சுதர்சன் அவர்களின் தயாரிப்பில் RJ Jinu வின் இயக்கத்தில் சஞ்ஜய், மிதுனா நடிப்பில் உருவான “கனவே நீ” காணொளி பாடலின் சிறு முன்னோட்டம் நாளை (12.08.2020) மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீலின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகள் செல்வா முகுந்தன். சமீலுடன் இணைந்து இப்பாடலை அப்ரா லதீப் பாடியுள்ளார். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராஜா. படத்தொகுப்பு சசிகரன் யோ.

இப்பாடலில் இணைந்துள்ள நடிகை மிதுனா மற்றும் சமீல் ஏற்கனவே பல பாடல்களில் பணியாற்றியுள்ள நிலையில், சமீலுடனான தனது திரைப்பயணம் குறித்து மிதுனா பேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

எமது சினிமாத்துறை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாத சாதனையாளர். இசை விருதுகள் என்றால் இவர் இல்லாமல் இருக்கவே முடியாது என்று சொல்லுமளவுக்கு பல விருதுகளின் சொந்தக்காரன். தன் இசையாலும் குரலாலும் பல ரசிகர்களை கொள்ளை கொண்டவர். தற்போது தன்னை ஓர் நடிகனாகவும் நிருபித்து கொண்டிருக்கிறார். எம் கனவே நீ பாடலுக்கு தன் இசையாலும் குரலாலும் பலம் சேர்த்திருக்கிறார் என்பதை பாடலை பார்க்கின்ற போதே புரிந்து கொள்ள முடியும். விரைவில் உங்கள் உழைப்பின் பலனை திரையில் தருகிறோம். இசை விருதுகளின் நாயகனை உங்கள் முன் அடையாளப்படுத்துவதில் மிக்க மகிழ்வடைகிறோம். மனமார்ந்த வாழ்த்துக்கள் Shameel J அண்ணா…