ஜோன்சன் 4 மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கும் “தாயுமானவன்”

1018

PML Media செல்வா முகுந்தன் தயாரிப்பில் lift ஒருங்கிணைப்பில் நடிகர் எம்.எப்.ஜோன்சனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் காணொளிச் சித்திரம் “தாயுமானவன்”.

வின்சன் குருவின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் வித்தியாசமான முறையில் உருவாகும் இப்படைப்பில் யாழ். யசீதரன், ரொபேட், ரெமோ நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“தாயுமானவன்” குறித்த சிறப்புக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார் நடிகர், இயக்குனர் ஜோன்சன், “இது ஒரு கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. பாடலூடு சில வசனங்களும் வரும். இதன் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவு பெற்றிருக்கின்றன. 10 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளார்கள்.

இது என் கலைப்பயணத்தில் முக்கிய படைப்பாக அமையும். படப்பிடிப்புக்கள் நிறைவடைந்து தற்போது எடிட்டிங் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வளவு காலமும் ஒளிப்பதிவாளராக மட்டும் அடையாளம் காணப்பட்ட வின்சன் குரு, இதில் கைதேர்ந்த படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். நிச்சயம் அவரின் உழைப்பு இதில் பேசப்படும்.

காட்சிகளைத் தொகுத்த பின்னரே அதற்கேற்ப வரிகள் எழுதி மெட்டமைத்து இசையமைக்கப்படப்போகின்றது. எனவே இன்னமும் இசையமைப்பாளர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஓரிரு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டு விடும். செல்வா முகுந்தனின் பங்களிப்பில் படப்பிடிப்புக்கள் நடித்தி முடித்தாகிவிட்டது. எதிர்பார்த்த பட்ஜெட்டை தாண்டி நிற்பதனால், மேலும் சில தயாரிப்பாளர்களை எதிர்பார்த்துள்ளோன். விரைவில் இக் காணொளிச் சித்திரத்தை நிறைவு செய்து மக்கள் முன் கொண்டு வருவேன். பணியாற்றிய, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.” – என்றார்.