மேலும் 3 விருதுகளைச் சுவீகரித்த சாளினியின் “ரணம்” குறும்படம்

484

ஈழ சினிமாவில் முக்கிய பெண் திரைச்செயற்பாட்டாளராக விளங்குபவர் சாளினி சார்ள்ஸ். நடிப்பு, பாடல் வரிகள், திரைக்கதை, இயக்கம் என பல தளங்களில் பயணிக்கக்கூடிய இவர் சமூக அக்கறையுடன் பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார். பல்வேறு விருதுகளையும் தனதாக்கியுள்ளார்.

அத்துடன் Yarl Entertainment என்கிற நிறுவனத்தின் மூலம் சினிமாவில் ஆர்வமுள்ள பல புதியவர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார்.

சாளினியின் இயக்கத்தில் அண்மையில் உருவாகிய குறும்படம் “ரணம்”. இது ஏற்கனவே சில விருதுகளைப் பெற்ற நிலையில், தற்சமயம் மேலும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

International Festival of Red Cross and Health Films
Cefalù film festival 2019
Sinevizyon International Film Festival
Humanitarian Film Day Institutional Communication See Less

ஏற்கனவே இக்குறும்படம் “நாவலர் விருது”, “அஜண்டா 14” உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், இப்பொழுது ஒட்டுமொத்தமாக 08 விருதுகளை அது சுவீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.