சஞ்ஜய், மிதுனா நடிப்பில் “கனவே நீ” காணொளிப்பாடல் வெளியீடு

525

SS Jaffna சுதர்சன் அவர்களின் தயாரிப்பில் RJ Jinu வின் இயக்கத்தில் சஞ்ஜய், மிதுனா நடிப்பில் உருவான “கனவே நீ” காணொளி பாடல் இன்று (15) மாலை “படைப்பாளிகள் உலகம்” யு-ரியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

சமீலின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகள் செல்வா முகுந்தன். சமீலுடன் இணைந்து இப்பாடலை அப்ரா லதீப் பாடியுள்ளார். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராஜா. படத்தொகுப்பு சசிகரன் யோ.

அழகான காதல் பாடலாக வெளிவந்துள்ள இதில், சஞ்ஜய் – மிதுனாவின் நடிப்பு இளமைத் துள்ளலாக உள்ளது. முக்கியமாக இப்பாடலில் கலை இயக்கம் பாராட்டத்தக்கது. கலை இயக்குனர்களாக RJ Jinu, Skv Vinshan, SN Ragu ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

திருமணக் காட்சி, பிறந்த நாள் காட்சி என நிறைய மினைக்கெடல்களுடன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார் ஆர்ஜே ஜினு. ரெஜி செல்வராஜாவின் கமெராக் கண்களும் “அட!” போட வைக்கின்றது. மொத்தத்தில் “கனவே நீ” நிறைவான ஒரு காணொளிப் பாடல்.