பரதன், பூர்விகா நடிப்பில் “தேன் காரி” காணொளிப்பாடல் – செப். 09 ரிலீஸ்

1179

கடந்த மாதம் “பரதா” பாடலைத் தந்த கூட்டணி இம்மாதம் “தேன் காரி” என்ற பாடலுடன் வந்திருக்கின்றது. ஆம்! பரத் எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் பெருமையுடன் வழங்கும் சிவ பரதன் (பரா போய்), பூர்விகா நடிப்பில் உருவான “தேன் காரி” பாடல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இப்பாடலுக்கான இசை, வரிகள் மற்றும் குரல் சிவி லக்ஸ், ஒலிக்கலவை ஷமீல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் டிசைன் ஷரத் (ஸ்ரூடியோ லைக்)

இப்பாடலின் ரீசர் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி மாலை 06 மணிக்கும், பாடல் செப்டெம்பர் 09 ஆம் திகதி மாலை 06 மணிக்கும் வெளியாகும் என பாடல் குழு அறிவித்துள்ளது. இன்று (16) வெளியாகியுள்ள பாடலின் முதற்பார்வை, கிராமிய மணம் கமழும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.