பத்மயன் இசையில் “நல்லூரில் தூயவனே” பக்திப் பாடல்

1116

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று (17) மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இப்பெருந் திருவிழாவினை முன்னிட்டு கந்தனின் புகழ் பாடும் வகையில் மீரா மது, பரத் பிக்சர்ஸ் மற்றும் கப்பிட்டல் தொலைக்காட்சி தயாரிப்பில் பத்மயன் இசையில் “நல்லூரில் தூயவனே” பாடல் வெளிவந்துள்ளது.

இந்தப் பாடல் உருவாக்கத்தில் பலர் பணியாற்றியுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ரிஷி செல்வத்தின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் காணொளிப் பாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடலை மீரா, ரமணன், மடோன்னா ஆகியோர் முதன்மையாகப் பாட, அவர்களுக்கு அணி சேர்க்கும் வகையில் சங்கீர்த்தன் பிரபாகரன், பகீர் மோகன், ஜெயந்தன் விக்கி மற்றும் ரெஜி மோகன் ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

பாடல் வரிகள் சாந்தகுமார். நாதஸ்வரம் பிரஷாந்த் ரஜிந்தன், தவில் பானு சங்கர், வீணை குவேந்தினி. இன்னும் பல இசைக்கலைஞர்கள் இப்பாடலில் ஒன்றிணைந்துள்ளார்கள். கடந்த வருடமும் இது போன்றதான முத்தான பக்திப் பாடல் ஒன்றை நல்லூர் உற்சவ காலத்தில் பத்மயன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.