இயக்குனர் மித்ரன் வெளியிட்ட “91 – 19” காணொளிப்பாடல் first look

733

டிலீப் வர்மன் இசையில் தாயகக் கலைஞன் சுகிர்தன் கிருஷ்துராஜா இயக்கத்தில் உருவான “91 – 19” என்ற காணொளிப்பாடலின் முதற்பார்வையினை தென்னிந்திய பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன் தனது ருவிட்டர் பக்கத்தில் இன்று (18) வெளியிட்டுள்ளார்.

செல்வா முகுந்தனின் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான இப்பாடலில் அஜய், நர்வினி டேரி ஆகியோர் நடித்துள்ளதுடன், ஒளிப்பதிவு ரிஷி செல்வம், இணை இயக்கம் தமிழன்டா ஆகாஷ், உதவி இயக்கம் நிலவன் தமிழன்.

சினிமா குறித்தான அறிவும், அனுபவமும் கொண்ட இளங்கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இப்பாடலின் first look இனை “இரும்புத்திரை”, “ஹீரோ” படங்களை இயக்கிய தென்னிந்திய இயக்குனர் பிஎஸ். மித்ரன் இன்று வெளியிட்டு வைத்தார்.