சசிகரன் யோவின் ‘ஒரு துளி காதல்’ – அத்தியாயம் 02

514

நிழல் தேடும் கலைஞன் தயாரிப்பில் “திரை சீசன் 01” குறும்படத்தொடரின் இரண்டாம் பாகமான “ஒரு துளி காதல்” நேற்று (18) வெளியாகியுள்ளது.

சாத்வீகன் பாவா, நிதி குட்டி மற்றும் தமிழ் நாகாவின் நடிப்பில் உருவாகியுள்ள இக்குறும்படத்தை சசிகரன் யோ இயக்கியுள்ளதுடன், ஒளிப்பதிவு – படத்தொகுப்பு பணிகளையும் அவரே பார்த்துள்ளார்.

இந்த ‘திரை சீசன் 01’ குறும்படத் தொடர் குறித்து அதன் இயக்குனர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிந்துள்ளார்.

எல்லாரிட வாழ்க்கையிலையும் வலி இருக்கும்! அதற்கு மருந்தாக சில மாற்று வழிகளும் இருக்கும். ஆனா எங்களுக்கு மட்டும் வலி தாறதும் சினிமாதான். அத போக்கிற வழியும் சினிமாதான்… சினிமா மீது மோகம் கொண்ட ஜீவன்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒன்றாயின… அவை நிழல் தேடும் கலைஞன் எனும் குழுவாயின… எங்கள் மோகம் விருதுகள் மீதோ! விலையுயர்ந்த தொழினுட்ப கருவிகள் மீதோ அல்ல அவற்றிலும் மேலான பார்வையாளர்கள் உங்கள் கைதட்டல் மீது! ஒரு ஒரு பார்வையாளரும் உந்துசக்தி ஒரு நாள் உங்கள் கைதட்டல் வான் அதிரும்! அதுவரை எங்கள் முயற்சி கடல் மீது சிறு துளியாய்!

தாயகத்தில் இருந்து சினிமா முயற்சிகளைத் தொடரும் பலரின் இன்றைய போக்கு முழு நீளத்திரைப்படம் நோக்கியதாகவே இருக்கின்றது. இப்பொழுது குறும்படங்களின் வரவுகள் குறைந்து காணொளிப்பாடல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பரீட்சார்த்த முயற்சியாகவும் இளங்கலைஞர்களுக்கு களம் அமைக்கும் வகையிலும் சசிகரன் யோவின் ‘திரை சீசன் 01’ தொடர்வது பாராட்டுக்குரியதே!