சமூகத்தின் கண்ணாடியாக சங்கீதாவின் “கருவலி” குறும்படம்

704

மிகக் குறைந்தளவான நடிகர்கள், குறைந்தளவான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி நிறைவான ஒரு குறும்படத்தைக் கொடுத்திருக்கின்றார் அறிமுக இயக்குனர் சங்கீதா நடேசலிங்கம்.

“படைப்பாளிகள் உலகம்” சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் வழங்கும் “கருவலி” குறும்படம் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அஜய் மற்றும் பிரியா முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சசிகரன் யோ. இசை பகீர் மோகன்.

திருமணமாகி குழந்தைப் பாக்கியம் கிட்டாத ஒருத்திக்கு இந்தச் சமூகம் தரும் “மலடி” என்கிற பட்டமும், சமூகத்தில் அவள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இப்படம் படைக்கப்பட்டுள்ளது. படம் கூறவந்த விடயம் மற்றும் குறை, நிறைகளை நாங்கள் விரிவாக பிறிதொரு பதிவில் விமர்சனத்தினூடாக பார்க்கலாம். இப்போது குறும்படம் உங்கள் பார்வைக்கு…