ஜனனி ஹர்ஷன் இசையில் “பிஞ்சு செல்லமே” பாடல்

654

கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஜனனி ஹர்ஷன் இசையில் “பிஞ்சு செல்லமே” என்கிற அழகான மழலையர் பாடல் வெளிவந்துள்ளது. இப்பாடலுக்கான வரிகளையும் இசையமைப்பாளரே எழுதியுள்ளதுடன், பாடலை நீரஜா பாடியுள்ளார்.

காணொளி வடிவில் வெளிவந்துள்ள இப்பாடலில் இசையமைப்பாளர் ஜனனி, பாடகி நீரஜாவுடன் யாஷினி டிலுக்ஷான் என்கிற குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளது. பாடல் ஒளிப்பதிவு யோகா விகிர்தன், படத்தொகுப்பு ரிஜெ றேணுஜன்.

பாடல் ஒழுங்கமைப்பு, ஒலிப்பதிவு மற்றும் இசைக்கோர்ப்பு ஹர்ஷன் ஜோசப். இலங்கை இசைத்துறையில் வெகு சொற்பமான பெண் “கீ போர்ட்” கலைஞர்களே இருக்கும் நிலையில், ஜனனியின் இந்தப் பாடல் வரவேற்கத்தக்கதுடன் நேர்த்தியாகவும் அது வெளிவந்துள்ளது.

Vocal – Neerajah
Music – Janani Harshan
Lyrics – Janani Harshan
Vocal Arrangements – Harshan Joseph
Recording & Mixing – Harshan Joseph
Cast – Yaashini Diluxhan
DOP – Yoga Vikirthan
Edit – TJ Renujan
Recording Lab – M Tracks