தமிழ்த் திரைத்துறை கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் -03

553

மூத்த கல்வியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், மற்றும் மூத்த கலை ஆளுமைகள் முன்னிலையில் “தமிழ்த் திரைத்துறை கலைஞர்கள் சங்கத்துக்கான ஒன்றுகூடல்” இன்று (23) மாலை 04 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்த் திரைத்துறைக் கலைஞர்கள், வட மாகாண தன்னார்வ குழு வெளியிட்டுள்ள செய்தியில், “சுயாதீன படைப்பாளிகளாகிய நாம் ஒருமித்த சிந்தனையோடு பலம் மிக்க கட்டமைப்பை எமக்காக உருவாக்கும் முயற்சியில் மூன்றாவது ஒன்றுகூடலில் பங்கெடுக்க தயாராகியிருக்கிறோம்.

மூத்த கல்வியியலாளர்கள், அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் மூத்த கலை ஆளுமைகள் முன்னிலையில் தமிழ் திரைத்துறை கலைஞர்கள் சங்கத்துக்காக எம் ஒருமித்த கருத்துக்களோடு ஒன்றிணைவோம்.

தமிழ் திரைத்துறைக் கலைஞர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைத்து நிற்கின்றோம்”.

குறிப்பு : குறித்த நேரத்திற்கு சமூகமளிப்பதோடு, சுய பாதுகாப்பு. மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றி இணைந்து நிற்போம்.