கோடீஸ்வரனின் ‘தழும்பு’ குறும்படம்

607

‘கோடீஸ் எண்டர்டெய்மென்ட்’ தயாரிப்பில் இம்ரான், சுகிர்தா, கீர்திகா, சுதா, புஷ்பகாந்த், ஜானு முரளிதரன் நடிப்பில் வெளிவந்துள்ள குறும்படம் ‘தழும்பு’.

இதனை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதுடன் தயாரித்துள்ளார் கே.கோடீஸ்வரன். ஒளிப்பதிவு எஸ்.என்.விஷ்ணுஜன், படத்தொகுப்பு ரேணுஜன், இசை ஏ.ஜே.சங்கர்ஜன்.

இளவயது காதல் ப்ளஸ் கல்யாணம், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என எம் சமுதாயத்தில் காணப்படும் பொதுப் பிரச்சனை ஒன்றை கதைக்களமாகக் கொண்டு இக்குறும்படம் படைக்கப்பட்டுள்ளது. சொல்ல வந்த விடயத்தை இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டிருக்க வாய்ப்பிருந்தும் 23 நிமிடங்கள் குறும்படத்தை நீட்டியிருப்பதாக அதனைப் பார்க்கும் போது உணர்வு ஏற்படுகிறது.

படத்தொகுப்பாளர் பல இடங்களில் ‘கத்திரி’ போட்டிருக்கலாம். ஆனாலும், இது சமூகத்திற்கு தேவையான ஒரு கதை தான். எனவே, கொஞ்சம் விரிவான விமர்சனத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.