‘பிக் பொஸ்’ தர்ஷனின் ‘தாய்க்குப் பின் தாரம்’ டீசர் வெளியீடு

941

கடந்த வருடம் விஜய் டி.வி.யின் ‘பிக் பொஸ்’ – 3 நிகழ்வில் வழக்கத்திற்கும் மாறாக இலங்கையில் இருந்து 02 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இருவரும் அந்நிகழ்ச்சி மூலம் பிரபல்யம் அடைந்ததுடன், அந்த இருவராலும் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யும் எகிறியது. அதனைத் தொடர்ந்து லொஸ்லியா ‘பிரண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

மற்றைய இலங்கையரான தர்ஷன் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசனால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனாலும் எதுவித படப்பிடிப்புக்களும் ஆரம்பித்ததாக தெரியவில்லை. அதற்குள் கொரோனாவும் வந்து விட்டது.

இந்நிலையில் தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தாய்க்கு பின் தாரம்’ என்ற பாடலின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தர்ஷனுடன் தொலைக்காட்சி நடிகை ஆயிஷா நடித்துள்ளார். இந்தப் பாடல் சித் ஸ்ரீராம் – இசையமைப்பாளர் தரண் குமார் கூட்டணியில் உருவாகியுள்ளது.

இதில் நடித்ததால் தனது கனவு நனவாகியுள்ளதாக தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ‘தாய்க்கு பின் தாரம்’ பாடலின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.