இணையத்தில் வெளியாகியது “தமிழ்ச்செல்வி” குறும்படம்

885

“கர்ணன் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் உருவான “தமிழ்ச்செல்வி” குறும்படம் இன்று (28) யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

சபேசன் சண்முகநாதன், மகேஸ்வரி ரட்ணம், நிவி, லாரா பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்த இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவு நிஷாந்தன் ராஜகுலசிங்கம், படத்தொகுப்பு ஆர்.டி.ராஜ், இசை அருண் போல், கலை இயக்கம் இளங்கோ ஜி.

இக்குறும்படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கின்றார் சபேசன் சண்முகநாதன். திரைக்கதை, இயக்கம் கனகநாயகம் வரோதயன்.

ஈழப்போரின் இறுதி அத்தியாயத்தில் தம் உறவுகளைத் தொலைத்த மூவரை மையப் பாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படும் துயரங்களை முடிந்தளவு பதிவு செய்திருக்கின்றார்கள். விரிவான விமர்சனத்துடன் சந்திப்போம். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு…