சங்கீர்த்தன் இசையில் “போ உறவே” காணொளிப்பாடல்

586

Jaffna Zero Budget film, M Productions உடன் இணைந்து வழங்கும் “போ உறவே” – Rebirth Song காணொளிப்பாடல் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கான இசை சங்கீர்த்தன். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் பிரியன் அருள். படத்தொகுப்பு செ.சைரஜன்.

“போ உறவே” பாடல் வெளிவந்த கணத்தில் இருந்து பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகின்றது. குறிப்பாக அது படமாக்கப்பட்ட விதம், ட்ரோன் காட்சிகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட விதம் என்பன நுணுக்கமாக பாராட்டப்பட்டு வருகின்றது. கடற்கரையையும் சூரிய ஒளியையும் தன் கமெரா கண்களுக்குள் சிறைப்பிடித்த ஒளிப்பதிவாளர் பிரியன் தனித்துத் தெரிகின்றார்.

ஒட்டுமொத்தமாக இளைஞர்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருக்கும் அட்டகாசமான பாடல் “போ உறவே”. வாழ்த்துக்கள் பாடல் குழுவிற்கு…

Music, Mix & Mastering : Shangeerththan
Direction and D.O.P : Pryan Arul
Camera Team: Pryan Arul & Shyrajan VFX
Vocal : Shangeerththan
Rap & Lyrics : Magz
Editing,VFX & Aerial View : Shyrajan VFX
Art Direction & Production Manager : JeKa
JZBF Team : Sarankan NJ | Mahizhnan Siva