தேவாவின் குரலில் நம்மவர் பாடல் “கலிகாலம்” நாளை வெளியீடு

723

தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் உருவாகியுள்ள நம்மவர்களின் பாடலான “கலிகாலம்” நாளை (செப்.01) வெளியிடப்படவுள்ளது.

இந்தப் பாடலுக்கான இசை தோமஸ் டெரிக், பாடல் வரிகள் குவேந்திரன் கணேசலிங்கம். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கம் “இலங்கையன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராஜா.

தமிழ் விது, ஜொனி, சஞ்சு ஜீவன், நவீன், ரொஸ்டன் உள்ளிட்டவர்கள் தோன்றும் இக்காணொளிப்பாடலுக்கான நடனம் கண்ணா உதய். கலை இயக்கம் கலா மோகன். டிசைன் கதிர். தேவாவின் பாடல் என்றாலே நம்மை ஆட்டம் போட வைக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.. எனவே கலக்கல் குத்துப்பாடலாக இது வெளியாகவுள்ளது.