“நேற்றிருந்த நம்ம ஊரு மாறிப்போச்சுடா..” தேவாவின் குரலில் கலக்கல் கானா

839

தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர், பாடகர் “தேனிசைத் தென்றல்” தேவாவின் குரலில் உருவாகியுள்ள நம்மவர்களின் பாடலான “கலிகாலம்” நேற்று (செப்.01) வெளியாகியுள்ளது.

உள்நாட்டு பிரச்சனை காரணமாக வெளிநாடு சென்ற ஒருவர், மீண்டும் பல வருடங்கள் கழித்து சொந்த ஊர் திரும்பும் போது, அங்கு எதுவுமே முன்பைப் போல இல்லை என நினைத்து கவலைப்படும் போது, பாடல் தொடங்குகின்றது.

வாள்வெட்டு, வன்புணர்வு, தற்கொலை என அன்று இல்லாமல் இன்று ஆதிக்கம் செலுத்தும் பல சமூகப்பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அன்றும் – இன்றும் என்ற ஒப்பீட்டுடன் கலக்கலாக இக்கானா பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கான இசை தோமஸ் டெரிக், பாடல் வரிகள் குவேந்திரன் கணேசலிங்கம். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கம் “இலங்கையன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராஜா.

தமிழ் விது, ஜொனி, சஞ்சு ஜீவன், நவீன், ரொஸ்டன் உள்ளிட்ட பலர் தோன்றும் இக்காணொளிப்பாடலுக்கான நடனம் கண்ணா உதய். கலை இயக்கம் கலா மோகன். டிசைன் கதிர். வர்ணச் சேர்க்கை ரிஷி செல்வம்.

மேலும் பல நடனக்கலைஞர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்பாடலில் ஒன்று சேர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. சினிமா என்பது கூட்டு முயற்சி. அதில் இவ்வாறானவர்கள் ஒன்றிணையும் போது அதனை மேலும் வளர்ச்சிப் படி நோக்கி கொண்டு செல்ல முடியும். அந்த வேலையை, இலங்கையன் பிக்சர்ஸ் இன்று செவ்வனே செய்து கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள் பாடல் குழுவிற்கு…