யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா (JICF2020) – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

851

ஆறாவது தடவையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival 2020 – JICF 2020) எதிர்வரும் ஒக்டோபர் 23 முதல் 28 ஆம் திகதி வரை யாழில் நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் கோரப்பட்டுள்ளதாக அதன் பிரதான ஒருங்கமைப்பாளர் அனோமா ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். முழு நீளத்திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் படைப்பாளிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.

2018 டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்புக்களை எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதிக்கு முன்பதாக தங்களிடம் நேரிலோ அல்லது தபால் மற்றும் இணையவழி மூலமோ சமர்ப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். விண்ணப்பப்படிவங்களைப் பெறல் மற்றும் மேலதிக விடயங்களை அறிந்து கொள்ள www.jaffnaicf.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்.

இலங்கையின் சுயாதீன திரைப்படைப்பாளிகளுக்கு இது மிகச்சிறந்த களம் என்பதால், இதனை கூடியவரை அனைத்து தமிழ்த் திரைத்துறைச் செயற்பாட்டாளர்களும் பயன்படுத்துமாறு “குவியம்” வேண்டுதலை முன்வைக்கிறது.