தமிழ் திரைத்துறைக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு – 04 (நிர்வாக சபை தெரிவு)

597

தமிழ் திரைத்துறைக் கலைஞர்கள் – வட மாகாணம் ஒருங்கிணைப்பில் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு – 04 உம் நிர்வாக சபைத் தெரிவும் நாளை (06) மாலை 3 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு குறித்து தன்னார்வ செயற்குழு வெளியிட்ட அறிவிப்பில்,

♦03.07.2020 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு ஒன்றின் போது சங்கத்தின் தேவை குறித்தும், சங்கத்தின் நன்மைகுறித்தும், கலைஞர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

♦ 05.07.2020 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு இரண்டின்போது அங்கத்துவ பதிவுகளும், சங்கத்தின் பதிவு தொடர்பாகவும், யாப்பின் தேவை குறித்த விவாதமும் தெளிவு படுத்தலும் இடம்பெற்றது.

♦ 23.08.2020 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு மூன்றின்போது மூத்த கலைஞர்கள், கலை ஆளுமைகள் கொண்ட ஆலோசனைக் குழுவின் தலைமையில் நிர்வாக சபை தெரிவு தொடர்பான தெளிபடுத்தல், யாப்பு வரைபு பற்றிய குறிப்பும் அதன் நோக்க செயற்பாடுகள் பற்றியும், சட்ட, நிதித்துறை, ஊடகம் போன்ற விடயங்கள் பற்றிய மேலதிக தெளிவு படுத்தலும் இடம்பெற்றது.

♦ முடிந்தவரை அனைவருக்கும் விடயங்கள் சென்றடையும் வண்ணம் தகவல்கள் பரிமாறப்பட்டது.

♦ 03.09.2020 அன்றுடன் அங்கத்துவ விண்ணப்படிவங்களின் பதிவு நிறைவுசெய்யப்படும் என 23.08.2020 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு மூன்றின்போது அறிவிக்கப்பட்டது.

♦ யாப்பு வரைபின் பிரகாரம் நிர்வாக சபை தெரிவு இடம் பெறும் எனவும் யாப்பு வரைபில் சேர்க்கப்பட வேண்டிய அல்லது நீக்கப்படவேண்டி விடயங்களை 03.09.2020ற்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

♦ நிர்வாக சபையில் அங்கத்துவம் அதாவது தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற யாதேனும் ஒரு பதவி நிலைக்கு தாங்கள் இடம்பெற விரும்பின் யாப்பு வரைபு உறுப்புரை 9ன் பிரகாரம் 03.09.2020ற்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

♦ 06.09.2020 அன்று நடைபெற இருக்கும் நிர்வாக சபை தேர்விற்கு பொதுச்சபையில் இருந்து பரிந்துரை செய்யப்படுபம் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் ஆலோசனைக் குழுவின் தீர்மாணத்தின் பின் அனுமதிக்கப்படுவார்கள்.

♦ 06.09.2020 அன்று நடைபெற இருக்கும் நிர்வாக சபை தேர்வில் 03.09.2020ற்கு பின் பதிவு செய்யும் அங்கத்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படமாட்டாது.

♦ 06.09.2020 அன்று நடைபெற இருக்கும் நிர்வாக சபை தெரிவிற்கான கலைஞர்கள் ஒருங்கிணைப்பிங்கான ஒன்று கூடலிற்கு பதிவு செய்யாத கலைஞர்கள் வருகை தரும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில் பதிவு மாத்திரமே இடம்பெறும்.

♦ பதிவுசெய்யாத கலைஞர்கள் தங்களது பதிவினை நிர்வாக சபைத்தேர்வின் பின்னரும் தமது அங்கத்துவத்தை பதிவு செய்வதன் மூலம் அங்கத்தவராக இணைந்து செயற்பட முடியும்.

♦ கலைஞர்களினது நன்மைகுறித்து மூன்று வகையினுல் சங்கத்தினை பதிவு செய்யவேண்டிய தேவை இருப்பதால் முதற்கட்டமாக வடமாகணம் என பிரதிநித்துவப்படுத்தி செயற்படுத்தப்படுகிறது.

♦ சங்கத்தினது தேவை குறித்தும் அதன் விவேகமான செயற்பாடுகள் குறித்தும் முன்னெடுக்கப்படும் உடனடி செயற்பாடுகளை ஏனைய மாவட்ட, மாகண சக கலைஞர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகிறோம்.

♦ மேற்குறித்த சங்கத்தினது செயற்பாடுகள் தொடர்பாக எழும் சந்தேகங்கள் மற்றும் அலோசனைகளை 04.09.2020 அன்றிற்குள் எமது தன்னார்வ செயற்குழுவுடன் தொடர்பு கொண்டு வழங்கமுடியும்.

தொடர்புகளுக்கு…0774407832 | 0753132932 | 0774603308 | 0772344550| 0764533511 | 0777922156 | 0779672868