சிவ பரதன் – பூர்விகா நடிப்பில் ‘தேன்காரி’ டீசர் வெளியீடு

1053

பரத் எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் பெருமையுடன் வழங்கும் சிவ பரதன் (பரா போய்), பூர்விகா நடிப்பில் உருவான “தேன் காரி” பாடலின் டீசர் அண்மையில் வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கான இசை, வரிகள் மற்றும் குரல் சிவி லக்ஸ், ஒலிக்கலவை ஷமீல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் டிசைன் ஷரத் (ஸ்ரூடியோ லைக்)

எம்.ஜி.ஆர். என்றதுமே எங்களுக்கு சட்டென ஞாபகம் வருவது அவரது கலர் கலரான உடுப்புக்கள் தான். அப்படி எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வந்துள்ள ‘தேன்காரி’ பாடலும் கலர்ஃபுள்ளான பாடலாக உருவாகியுள்ளதை டீசரைப் பார்க்கும் போதே புரிகிறது. இம்மாத இறுதியில் பாடல் வெளியிடப்படவுள்ளதாக பாடல் குழு அறிவித்துள்ளது.