ஜீவன் – அம்முவின் காதலைக் கூறும் திலீப் வர்மனின் “91-19”

1070

2010 களில் பிரபல்யமான பாடகராக விளங்கியவர் மலேசியாவின் திலீப் வர்மன். இவரது ஆல்பம் பாடல்கள் தமிழ் சினிமா பாடல்களுக்கு இணையாக ரசிக்கப்பட்டவை. அவரது குரல் இன்றும் மனது மறக்காத ஒன்று. அவரது இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்த பாடல் “91-19”.

90 களின் காதலை அச்சு அசலாக வெளிப்படுத்தும் விதத்தில் பாடல் காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சுகிர்தன் இயக்கியுள்ளதுடன், அஜய் மற்றும் நர்வினி டேரி ஆகியோர் நடித்துள்ளனர். ரிஷி செல்வத்தின் காட்சிக்கவ்வல்கள் படத்திற்கு பலம் சேர்கின்றது. இளங்கோ சிறில் இன் படத்தொகுப்பும் கச்சிதமாக உள்ளது.

மொத்தத்தில் “91-19” பாடல் இன்று ஈழ சினிமாவை நேசிக்கும் அனைவராலும் போற்றிப் பாராட்டும் ஒரு படைப்பாக மாறியுள்ளது. இந்தப் பாடலை தயாரித்துள்ளதுடன், அதற்கான வரிகளையும் எழுதியிருக்கின்றார் செல்வ முகுந்தன். ஈழ சினிமாவில் இது மைல் கல்லான பாடலாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனை தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டமை கூடுதல் சிறப்பு.

பாடல் குழு பற்றிய முழுமையான பதிவுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

’91 ~ 19′ பாடலை வெளியிடப்போகும் திரைப்பிரபலம் யார்?