தர்சன் கே துரையின் ‘உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா’ குறும்படம்

1066

Noize Makers சார்பில் முருகேசு அசோக்குமார் தயாரிப்பில் தர்சன் கே துரையின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் ‘உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா’.

துஷாந்தன் மற்றும் பூர்விகா நடித்துள்ள இப்படத்திற்கான ஒளிப்பதிவு க்றீடி, சுகேந்தன், படத்தொகுப்பு சதுர்சன், இசை பிரணவன்.

‘காதல் கோட்டை’ இல் இருந்து ‘பார்க்காமல் காதல்’ கொள்ளும் காதலர்களை பல சந்தர்ப்பத்தில் பார்த்திருப்போம். இந்தக் குறும்படம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான வட்ஸ்அப் குறூப்பில் உள்ள இருவர் பார்க்காமலே காதலிக்கும் கதை.

இப்படத்தின் இயக்குனர், தென்னிந்திய இயக்குனர் கௌதம் மேனனுடைய தீவிர ரசிகராக இருக்க வேண்டும். அவர் பாணியிலேயே கதை சொல்லலூடாக காட்சிகளை நகர்த்திச் செல்கின்றார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ரசிக்க வைக்கின்றது. தொடர்ந்தும் பாடல்களில் நடித்துவரும் பூர்விகா இதில் தன்னை நடிகையாகவும் நிரூபித்திருக்கிறார்.