இளசுகளை ஆட்டம் போட வைக்கும் ‘ரகிட ரகிட’ Sri Lankan Dance Cover

426

‘ஜகமே தந்திரம்’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இடம்பெற்ற ‘ரகிட ரகிட’ பாடல் இன்று ஒட்டுமொத்த இளசுகளையும் ஆட்டம் போட வைக்கும் பாடலாக அமைந்துள்ளது. பாடலுக்கு மேலும் பலம் சேர்ப்பது நடிகர் தனுஷின் இயல்பான குரல்.

இன்று கொரோனாவால் ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கிப்போயுள்ள நிலையில், ‘மாஸ்டர்’ படப்பாடல்களுக்கு பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அப்படி ஹிட்டடித்த ‘ரகிட ரகிட’ பாடலுக்கு பல ‘cover version’ கள் வெளியாகியுள்ளன.

அதில் மிகவும் லேட்டஸ்டாக வந்திருப்பது ‘ரகிட ரகிட’ இலங்கை வேர்ஷன் – Dance Cover. கெவின், பவிதன், ரெமோ நிஷா, மனோ, ரஜீ மற்றும் சுலக்ஷ் ஆகியோர் நடித்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ராஜ் மூவீஸ், படத்தொகுப்பு பவிதன் ராஜசேகரம், நடன அமைப்பு குகன் ஆருஷ்.

இது ஒரு Dance Cover ஆக இருந்தால் கூட நிறையவே மினைக்கெடல்கள் பாடலைப் பார்க்கும் போது தெரிகின்றது. குறிப்பாக ஒளிப்பதிவு மற்றும் நடன அமைப்பு என்பன சிறப்பாக உள்ளன. நடனக்கலைஞர்களாக தோன்றியிருக்கும் அந்த நடிகர்களின் நடனத்திறனும் சபாஷ் போட வைக்கின்றது.