குறுந்திரையில் இருந்து பெருந்திரை நோக்கி ‘திரை அரங்கம்’ – விபரம் உள்ளே!

468

தளம் தேடும் கலைஞர்களுக்கான களத்தினை அமைத்துக் கொடுக்க ‘தடம்’ ஏற்படுத்தியுள்ள களம் ‘திரை அரங்கம்’. இதில் பெருந்திரை நோக்கிய கனவுடன் பயணிக்கின்ற அனைவரும் இணைந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.

*உங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் 3 நிமிடங்களுக்குள் குறும்படம் ஒன்றை உருவாக்குங்கள்.

*குறும்படங்கள் கைத்தொலைபேசியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

*குறும்படங்கள் எந்தக் கதைக்களத்தினைக் கொண்டும் அமைக்கப்படலாம்.

*இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் படைப்பாளிகள் பங்கு பற்றலாம்.

உருவாக்கப்படும் குறும்படங்கள் ஓக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் என்ற மின்னஞ்சல் முகவரியூடாக போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தெரிவு செய்யப்படுகின்ற 06 குறும்படக்குழுக்களுக்கு உங்கள் புதிய குறும்படங்களை தயாரிப்பதற்காக தலா 50 ஆயிரம் ரூபா தயாரிப்புச் செலவாக வழங்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் குறும்படங்கள் திரை அரங்கப் பெருந்திரையில் வெளியீடு செய்து வைக்கப்படும்.

இந்த 06 படைப்பாளிகள் குழுவில் இருந்து தெரிவாகும் ஒரு குழுவிற்கு மற்றுமொரு நீள் குறும்படத் தயாரிப்புக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படவிருக்கின்றது.

எனவே, மேலதிக விபரங்களுக்கு மேல் குறிப்பிட்ட மின்னஞ்சல் இலக்கம் அல்லது 0766292457 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.