நாவில் தமிழ் துள்ளி விளையாட நிரஞ்சனின் ‘வல்லினம்’ பாடல்

568

Jaffna Zero Budget Films இன் புதிய வெளியீடாக வெளிவந்திருப்பது ‘வல்லினம்’ காணொளிப்பாடல்.

நிரஞ்சனின் இசையில் மகிழ்னனின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலினை சங்கீர்த்தன், பிரதீஸ், கஜானன், டயஸ் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் ஒலிக்கலவை சங்கீர்த்தன்.

காணொளிப்பாடலினை இயக்கியுள்ளார் அறிஞ்சயன், ஒளிப்பதிவு பிரியன் அருள் மற்றும் சைரஜன், படத்தொகுப்பு மற்றும் வி.எப்.எக்ஸ் சைரஜன். வெளிப்புறப் படப்பிடிப்பு தொடர்பு மற்றும் கலை இயக்கம் ஜெகா.

இப்பாடலில் அதிகம் கவனிக்க வைப்பது வரிகள். அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் மகிழ்னன். அவர் பெயரைப் போலவே அவர் வரிகளிலும் தமிழ் துள்ளி விளையாடுகின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இப்பாடலின் சில வரிகளை இங்கே தருகின்றோம். பாருங்கள்…

வரம்பு சிதறுகின்ற வழிகள் மிகை நிறைந்த
வலிகள் பழகும் சிறு வாழ்வோ இயல்பில் ஈன்றெடுத்த
இறையின் சிறு துகள்கள்
வழி சிறு விலகலும் வீழ்வோ..