லீ ஸ்பொர்ட் தயாரிப்பில் சிவி இன் “போர் வாள்” காணொளிப்பாடல்

457

“லீ ஸ்பொட்” (பிரான்ஸ்) தயாரிப்பில் முதல் படைப்பாக வெளிவந்திருக்கின்றது “போர் வாள்” காணொளிப்பாடல். இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார் சிவி லக்ஸ். அவருடன் இணைந்து ஜெனியும் பாடியுள்ளார்.

சிவி லக்ஸ்ஸை பொருத்தவரையில் ஒரு ராப் இசைக்கலைஞராக இலங்கைத் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் இந்த வருடம் தொடர்ச்சியாக அவரது இசையில் பாடல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. இன்னும் இரண்டு பாடல்கள் வெளியீட்டுக்கு வரிசை கட்டி நிற்கும் நிலையில் இன்று (03) “போர் வாள்” வெளிவந்துள்ளது.

இலங்கை மற்றும் பிரான்ஸ் கலைஞர்களின் ஒன்றுகூடலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு பிரான்ஸ் மற்றும் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஒளிப்பதிவுகளை ஷரத் (ஸ்டூடியோ லைக்) செய்திருந்ததுடன், லுஷான் சிஜே பிரான்ஸ் படப்பிடிப்புக்களை செய்துள்ளார்.

சிவ பரதன் உள்ளிட்டவர்கள் இலங்கையிலும், ஒரு மிகப்பெரும் நண்பர்கள் கூட்டம் பிரான்ஸிலும் தோன்றி நடித்துள்ளது. பாடலுக்கான ஒலிக்கலவை ஷமீல். படத்தொகுப்பு மற்றும் டிசைன் ஷரத்.