பிக் பாஸ் – சீசன் 04 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

426

விஜய் டி.வி.யின் “பிக் பாஸ்” நிகழ்ச்சி உலக அளவில் தமிழ் மக்களிடையே மிகப்பிரபல்யமானது. அதுவும் கடந்த முறை (சீசன் 03) இலங்கைப் போட்டியாளர்கள் இருவரை அவர்கள் உள்ளீர்த்ததும், அதன் மூலம் அவர்கள் பிரபல்யமானதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்..

அந்த வகையில் இம்முறை “பிக் பாஸ் – சீசன் 04” இன் போட்டியாளர்கள் யார்? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஏற்கனவே அனுமானிக்கத்தக்க போட்டியாளர்களின் பெயர்ப்பட்டியல் பல இணையங்களிலும் வெளியாகிருந்தது. அதுபோல இம்முறையும் யாரேனும் இலங்கைப் பிரபலம் அந்நிகழ்ச்சிக்கு உள்வாங்கப்படுகின்றாரா என்ற எதிர்பார்ப்பும் எம்மவர்கள் மத்தியில் இருந்தது.

நேற்று அதன் ஆரம்ப விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. 16 போட்டியாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஏற்கனவே அனுமானித்த லிஸ்டுடன் 80 சதவீதம் ஒத்துப்போகக்கூடியதாக போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே விஜய் டி.வி. பிரபல்யங்கள் என்பது கூடுதல் தகவல்.

இதோ லிஸ்ட் – நடிகர் றியோ ராஜ், நடிகை ஷனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி, நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், நடிகர் ஆரி, நடிகர் சோமசுந்தரம், நடிகை கேப்ரியல்லா, நடிகை அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா, பாடகர் ஆஜீஸ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி.