ஸ்ரீ துஸிகரனின் “நீ மட்டும் போதும்” குறும்படம்

542

பல்துறை சினிமாக்கலைஞன் ஸ்ரீ துஸிகரனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வடிவமைப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவான “நீ மட்டும் போதும்” குறும்படம் இன்று (05) NPT MEDIA யு-ரியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

தர்ஷி பிரியா, ஜொனி அன்டன் பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கான இசை ஜொனா ஜொனாதாப், ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ், ஒலிக்கலவை மற்றும் சிறப்பு சப்தம் பிரணவன் புவனேந்திரன், டைட்டில் டிசைன் தயாபரன் ரஜீவன்.

புனிதா பாரதியின் “பிரதிபலிப்பு” கதையை மையமாகக் கொண்டு முற்று முழுதாக கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது இக்குறும்படம் என்பது கூடுதல் சிறப்பு.

காதலர்களாக இருந்து திருமணம் முடித்தவர்கள், வேலை – குடும்பம் என்று வரும்போது அவர்களுக்கு இடையிலான நெருக்கத்தைக் குறைத்து இயந்திரமயமாகி விட்டார்கள். அதிலும் குறிப்பாக ஆண், தனது பணிச்சுமையால் மனைவி மீதான காதலையும் மறந்து விட்டார் என்பதாக கதை நகர்கிறது. இறுதியில் காதலே ஜெயிக்கிறது.

குறும்படம் குறித்து இயக்குனர் ஸ்ரீ துஸிகரன் இன்று இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நீ மட்டும் போதும்” என்ற எனது இரண்டாவது இயக்கத்தில் உருவான இக்குறும்படத்தை இணைய வாயிலாக உங்கள் பார்வைக்கு விடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கைபேசியல் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு மற்றும் திரைக்கதை, வசனத்தையும் சேர்த்சே செய்துள்ளேன்.

இக்குறும்படத்தின் மூலம் ott revenue என்ற செயற்திட்டத்தினையும் முன்னெடுத்துள்ளேன். பார்வையிடுவதோடு மட்டுமல்லாது நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் குறிப்பிட்டளவு தொகையினை பெற உதவுவீர்கள். அத்தோடு உங்கம் கருத்துக்களை தெரிவித்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.