யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா 2020 இற்கு தெரிவாகியுள்ள தமிழ்க் குறும்படங்கள்

975

இந்த ஆண்டுக்கான (2020) யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் ஒக். 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை யாழில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அனுப்பப்பட்ட படங்களில் இருந்து போட்டிக்கென தெரிவாகியுள்ள குறும்படங்களின் இறுதிப்பட்டியல் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த 16 படங்களில் 5 படங்கள் தமிழ்க்குறும்படங்களாகும்.

இயக்குனர் கலீஸின் “காட்டாறு”, இயக்குனர் லிங் சின்னாவின் “ஹீப்ரூ லிலித்”, இயக்குனர் கதிரின் “நிலம்”, இயக்குனர் விமல்ராஜியின் “எழில்” மற்றும் இயக்குனர் ராகுல் குமாரின் “மிஸ்டர் பிலிக்ஸ்” ஆகிய குறும்படங்களே இறுதிப்பட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த இயக்குனர்களுக்கும் இறுதிப்பட்டியலில் தெரிவாகியுள்ள ஏனைய சகோத மொழி இயக்குனர்களுக்கும் குவியத்தின் வாழ்த்துக்கள்.

கொரோனா நெருக்கடி மீண்டும் இலங்கையில் எழுந்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இம்முறை யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இடம்பெறுமா? என்பது தற்சமயம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து ஏற்பாட்டுக்குழுவினர் விரைவில் தங்கள் அறிவிப்புக்களை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.