“சம்பிரசாத” அரச குறும்படப் போட்டி 2020 (விபரங்கள் உள்ளே)

599

“சம்பிரசாத” அரச குறும்படப்போட்டி 2020 இற்காக குறுந்திரைப் படைப்பாளிகளிடம் இருந்து நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவுத்திகதி இம்மாதம் 30 (2020.10.30) ஆகும்.

இப்போட்டி பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தமிழில் 0772408836 (சண்முகராஜா) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சம்பிரசாத” குறும்படப்போட்டியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் அரச சினிமா ஆலோசனைக்குழு, இலங்கை கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

வெற்றியீட்டும் திரைப்படங்களுக்கும், அதில் பணியாற்றிய இயக்குனர், நடிகர், நடிகையர் எனப் பல பிரிவுகளுக்கும் பெறுமதி வாய்ந்த பணப்பரிசில்கள் காத்திருக்கின்றன.

குறும்படம் போட்டி பற்றிய விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

போட்டி நிபந்தனைகள் மற்றும் பரிசில் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பப்படிவத்தினை பெற இங்கே கிளிக் செய்யவும்.