ஈழவாணியின் ‘லூஸி’ திரைப்படம் – இன்று முதல் படப்பிடிப்பு!

1184

பூவரசி மீடியா மற்றும் VJ ரி.வி. தயாரிப்பில் ஈழவாணியின் எழுத்து இயக்கத்தில் உருவாகும் ‘லூஸி’ – இடப்பக்க இரை என்கிற முழு நீளத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இன்று (17) ஆரம்பமாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்திற்கான திரைக்கதை ஷங்ரமதீரன், இசை பத்மயன் சிவாநந்தன், ஒளிப்பதிவு ரெஜி செல்வராஜா, கலை கலாமோகன் செல்வராஜா, ஒப்பனை அன்று யூலியஸ், மக்கள் தொடர்பு ஜெனோசன் ராஜேஸ்வர், தயாரிப்பு மேற்பார்வை யாழ். தர்மினி.

‘லூஸி’ படத்தில் அபயன் கணேஸ், ஆர்ஜே நெலு, பூர்விகா, பிரியா, இருதயராஜ், ஜொனி அன்ரன், கார்த்திக் சிவா, சுகிர்தன் சி, கௌசி ராஜ், ஷாஷா செரின், சர்மிளா வினோதினி, திலகா, திலக், சஞ்சு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றது.

ஈழவாணி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு எழுத்தாளராக அறியப்பட்டவர். அவரது ‘பூவரசி வெளியீட்டகம்’ சார்பில் அவரது மற்றும் ஏனைய எழுத்தாளர்களது கவிதை, சிறுகதை என பல நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழ மற்றும் தமிழக எழுத்தாளர்களுக்கு இடையிலான பாலமாகவும் செயற்பட்டுக்கொண்டுள்ளார். ‘லூஸி’ திரைப்படம் இயக்குனராக அவரது முதல் சினிமா பயணம். எனவே, இலக்கியப் பரப்பைப் போல், சினிமாவிலும் வெற்றி பெற ஈழவாணியை வாழ்த்துகின்றோம்.