கண்களையும் காதுகளையும் குளிர்விக்கும் பிரியனின் ‘வெண்பனி’ பாடல்

1533

Jaffna Zero Budget Films இன் தயாரிப்பில் புதிதாக இன்று (17) வெளியாகியுள்ள பாடல் ‘வெண்பனி’. சுபாஷ்கரன் ரட்ணசிங்கத்தின் வரிகளில் உருவான இந்தப் பாடலுக்கான இசை பவித்திரன் கிருஷ்ணகுமார். பாடலைப் பாடியுள்ளனர் டயாஸ் மோகனதாஸ் மற்றும் சாரங்கன் NJ. இசைக்கலவை வாகீசன் ஆனந்த்.

பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் பிரியன் அருள். படத்தொகுப்பு, VFX மற்றும் கூடுதல் ஒளிப்பதிவு சைரஜன். உதவி இயக்கம் சது சிவா. ‘வெண்பனி’ பாடலில் சஞ்ஜூ ஜீவன் மற்றும் ஷாஷா ஷெரீன் ஆகியோர் தோன்றி நடித்துள்ளார்கள். ஸ்ரண்ட் ஜெகா.

Jaffna Zero Budget Films ஐ பொருத்த வரையில் அண்மைய காலங்களில் மாதம் ஒரு படைப்பு என்ற வகையில் தொடர்சியாக காணொளிப்பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘வெண்பனி’ பாடலைப் பொறுத்தவரை, இது அவர்களின் முன்னைய பாடல்களுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானது. டூயட்டாக வெளிவந்திருக்கும் இப்பாடலின் ஒளிப்பதிவு கண்ணுக்கு இதம் தரும் வகையில் நேர்த்தியாக உள்ளது.

பாடலின் குரல்களுக்குச் சொந்தக்காரர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குரலில் தனித்துவம் தெரிகின்றது. ‘பைக் வீலிங்’ முயற்சி செய்திருக்கின்றார்கள். அந்த ஸ்ரண்டைச் செய்த கலைஞர்களுக்கும் ஒரு சபாஷ்! மொத்தத்தில் அருமையான ஒரு பாடலைக் கொடுத்த பிரியன் அன்ட் டீமுக்கு பாராட்டுக்கள்.