அருகிவரும் கூத்துக் கலையின் மகிமையைப் பேசும் ‘கூத்தாடி’ குறும்படம்

637

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், வடமராட்சி கிழக்கு கலாசார பேரவையின் தயாரிப்பில் அம்பலம் திரைக்கூடத்தின் ‘கூத்தாடி’ குறும்படம் இன்று (18) இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் அண்ணாவி இராமநாதன், தனுராஜ், கார்த்திகேயன், அனுராகரன், பிரதீபா, கோகுலன், ரேகினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு எஸ்.தர்சன், படத்தொகுப்பு – ஸ்ரீ துசிகரன், இசை ஸ்ரீ நிர்மலன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கின்றார் தபின்.

அருகி வரும் கூத்து கலையின் மகிமையையும், அதன் தேவையையும்;, எம் எதிர்காலச் சந்ததிக்கு அது கடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் குறும்படம் சொல்லிப் போகின்றது.

கனதியான கதை, அதை தம் தோள்களில் சுமந்து நடித்த நடிகர்களும் முடிந்த வரை சிறப்பாக நடித்திருக்கின்றார்கள். ஒளிப்பதிவு, டப்பிங் போன்ற தொழில்நுட்ப விடயங்கள் இன்னமும் நேர்த்தியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அருகிவரும் எம் கலைகள் குறித்தான தெளிவை, புரிதலை ஏற்படுத்தும் வகையில் அதனைப் பேச முனைந்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!