சுதர்சன் இசையில் ‘டும் டும் டும்’ காணொளிப்பாடல்

337

அகனி சுரேஷ் தயாரிப்பில் சுதர்சன் (கனடா) இசையில் வெளிவந்துள்ள பாடல் ‘டும் டும் டும்’ இந்தப் பாடலை அகனி சுரேஷ் எழுதியுள்ளார். பிரித்திவி, சரிகா நவநாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஜெய்பிரகாஷ், கலைவாணி ஆகியோர் தோன்றி நடித்துள்ள இப்பாடலை இயக்கியுள்ளார் ஸ்ரீ விஜய். வெறுமனே பாடலாக அமையாமல் அதற்குள் ஒரு சிறு கதையையும் வைத்து ரசிக்கும் படி இயக்கியுள்ளார் இயக்குனர். பாடல் ஒளிப்பதிவு மற்றும் வர்ணச் சேர்க்கை சங்கர் கோபால்.

இலங்கை மற்றும் கனடா கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள இப்பாடலில் நாதஸ்வரம் – பிரசாந்த், வீணை – தர்சினி ஆகியோர் வாசித்துள்ளார்கள். இசைக்கருவிகளின் ஒலிப்பதிவு இலங்கையிலும், பாடல் ஒலிப்பதிவு கனடாவிலும் (ஜேம்ஸ் ஸ்ரூடியோ) இடம்பெற்றிருக்கின்றது.