ஒலி-ஒளி வடிவம் பெறும் பாவலர் தவ சஜிதரனின் “தமிழ்த்தாய் அந்தாதி”

399

‘மொழியைத் தாயாக வணங்கும் தமிழர் மரபுக்கு ஏற்ப தமிழின் பெருமைகளைச் சொற்செறிவோடும் பொருட்செறிவோடும் போற்றிப்பாடும் செய்யுட் கோவை தமிழ்த்தாய் அந்தாதி ஆகும்.

பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதியின் 30 பாடல்களையும் 15 இசைக் காணொளிகளாக உருவாக்கும் பெரும் வேலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்துக்கு நீங்களும் பங்களிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

குறித்த தமிழ்த் தாய் அந்தாதியின் 8 மற்றும் ஒன்பதாம் பாடல்கள் இசை வடிவம் பெற்றுள்ளன. இதற்கான இசை மற்றும் குரல் சதீஷ் ராம்தாஸ்.

Project conceptualization: Thava Sajitharan (பாவலர் தவ சஜிதரன்)
Music & vocal: Sathish Ramdas
Lyrics: Thava Sajitharan
Featuring Kavya Sathiyadas
Direction: Sathish Ramdas
Visual concept: Kavya Sathiyadas, Sathish Ramdas & VM Thilojan
Editing & graphics: VM Thilojan
Arranged and mastered by: Sid Kumar

பாவலர் தவ சஜிதரன் பற்றி சிரேஷ்ட ஊடகவியலாளர், அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் (பணிப்பாளர் – சூரியன் எப்.எம்) தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழுக்கு அழகும் அணியும் சேர்க்கும் பல்வேறு முயற்சிகளும் தமிழை அடுத்த தலைமுறைக்கு செறிவாகவும் முறையாகவும் கொண்டுசேர்க்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திவரும் சஜியின் அண்மைக்கால தமிழுக்கான முயற்சிகள் ஒரு நீண்ட, நெடிய தவம் போன்றவை. மொழியகம் என்ற இணைய வழி – கற்கவும் காக்கவும் என்ற வேட்கையோடு தமிழின் நீட்சியை அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தும் அரிய முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒரு உயர் முயற்சியாக எம்மொழியின் பெருமையை – அவர் சொற்களிலே சொல்வதானால் – உலக மொழிகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் வல்லமை கொண்ட தமிழின் தகைமையை சொற்செறிவோடும் பொருட்செறிவோடும் பாடும் முயற்சியாக இந்தத் தமிழ்த் தாய் அந்தாதியை உருவாக்கியுள்ளார்.”