ஸ்ரீ சகோதரர்களின் ‘கண்டேன்’ Lyrical video

585

Working Ants Studio உடன் இணைந்து ஸ்ரீ சகோதரர்கள் படைத்திருக்கும் புதிய பாடல். “கண்டேன்”. இந்தப் பாடலுக்கான இசை ஸ்ரீ விஜய் ராகவன். வரிகள் வருண் துஷ்யந்தன். ஸ்ரீ ஜெயந்தன், சாகித்யா கஜமுகன் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.

Lyrical video ஆக வித்தியாசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ள இப்பாடலுக்கான எண்ணமும், இயக்கமும் வருண் துஸ்யந்தன். அத்துடன் எதுகை மோனையாக அமைந்த அவரது வரிகள் பல இடங்கள் ரசிக்கும் படியாக உள்ளன.

உதாரணத்திற்கு, “இமையோடு ஏன் தாளங்கள் மீட்டினாயடி
ஒரு பார்வையில் சாசனம் நீட்டினாயடி…”

“தாவணிச் சங்கீதமே
ஆகினாய் என் கீதமே
ஆவணி வைபோகமே
காணவே கண் ஏங்குமே…”
என சில வரிகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.

பாடலுக்கான இசைக்கலவை சாயிதர்சன் (இந்தியா), அதே போல அவரது சாய்மதுரம் இசைக்கூடத்தில் புல்லாங்குழல் இசைக்கலைஞர் நட்ராஜ்ஜினுடைய குழல் இசை பதிவு செய்யப்பட்டது. இலங்கையின் Ebenezer Studio (Colombo) இல் ஏனைய குரல் ஒலிப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

Written & Directed by: Varuon Thushyanthan
Composed by: Srivijay Ragavan
Sung & Performed by: Sri Jeyanthan & Sahithya Gajamugan
Track arranged by: Srivijay Ragavan/ Sagishna Xavier
Mixing & Mastering: Sayeetharshan (Saimaduram Chennai)
Director of Photography: Kevin Niro